Brave Of Life தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, 2 March 2014

பாட்டாளி மக்கள் கட்சி, ஜாதி கட்சி என்றால்?



தாழ்த்த பட்டோருக்கான இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் தவறென்று சொல்லவில்லை அதே சமயம் அந்த நோக்கம் சரியான முறையில் உரியவர்களிடம் சென்றடைந்ததா என்றால் இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை . சமீபத்திய உதாரணம் தேவயானி தூதராக அதிகாரி திறமையின் அடிப்படை இல்லாமல் ஜாதியின் அடிப்படையில் பதவி பெற்றவர் தான் தவறு செய்தது தெரிந்ததும் ஒட்டுமொத்த இந்திய அரசாங்கத்தையும் ஜாதியின் பின்புலத்தால் தனது தவறுக்கு துணை சேர்த்தவர் 

ஒருவர் இன்னொருவரை ஜாதியின் பெயரால் அடையாளப்படுத்தினால் அது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான கொடுமை என கூச்சலிடும் அனைவரும் ஏன் அரசாங்கம் தங்களை ஜாதியின் பெயரால் பிரிப்பதை தடுக்க வில்லை ஏன் என்றால் உங்களுக்கு சலுகைகள் வேண்டும் அந்த ஜாதியின் பெயரால் அப்படிதானே? உங்களை நீங்களே ஜாதியின் பெயரால் தனித்திருக்கிறீகள். உங்களால் தாழ்த்த பட்ட ஜாதி என்று சொல்லப்படும் அந்த ஜாதியின் பெயரால் இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் பெறலாம் ஆனால் உங்களை ஏன் அப்படி அடையாளப்படுத்தக்கூடாது 

முதலில் உங்கள் ஜாதியை விடுங்கள் மற்றவரும் விடுவார். மண்ணின் மைந்தார்களோடு சேர்ந்து வாழுங்கள். உங்களது ஜாதியின் காழ்ப்புணர்ச்சிகளை விட்டுவிட்டு நேர்மையான முறையில் உழைக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் ஜாதியின் பெயரால் கிடைக்கும் சலுகைகளை திறமையின் பலத்தால் பெறுங்கள். அதை விடுத்து இதற்க்கும் எதிர்கருத்துககள் பரப்புபவர்களுக்கு சில கேள்விகள்....


இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் பெறுவதற்க்காக மட்டும் தாழ்த்தப்பட்டோர் என கூறிக்கொள்ளும் பொருளாதார தன்னிறைவு பெற்ற தலித்துக்கள் உங்கள் ஜாதியின் பெயரால் கிடைக்கும் இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளை வேண்டாம் என ஒதுக்க தைரியம் இருக்கிறதா ? அந்த சலுகைகளை திறமையின் அடிப்படையில் உங்களால் பெறமுடியுமா?

திறமை இல்லாவிட்டாலும் சலுகை வேண்டுமென்பதற்க்காக ஜாதியின் பெயரை தவறான முறையில் பயன்படுத்துவதோடு இல்லாமல் மற்றவர்களை ஜாதி வெறியர்கள் என்று புலம்புவது ஏன்?. பாரம்பரிய குடும்ப பந்தங்களை ஜாதி ஒழிப்பு மற்றும் காதலின் பெயரால் சீர்குலைப்பது எந்த விதத்தில் நியாயம் ? தனது குடும்ப பெண்களின் நல்வாழ்விற்க்காக போராடும் அவர்களை ஜாதிவெறியர்கள் என்று தூற்றுவதோ? 

தமிழகத்தின் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டோருக்காகவும் போராடிய ஒரே காரணத்திற்க்காக இன்று சமுதாயத்தின் பார்வையில் ஜாதி வெறியர்களாகவும் வன்முறையாளர்களாகவும் சித்தரிக்க படும் பாட்டாளி மக்கள் கட்சி ஜாதி கட்சி என்றால் உங்கள் ஜாதியின் பெயரால் இயங்கும் கட்சி ஜாதி கட்சி இல்லையா?

திராவிட கட்சிகளின் அதிகார போதைக்கு உங்களது ஜாதி உணர்வு ஊறுகாய் ஆக்கப்படுவது தெரியுமா? திராவிட கட்சிகளின் கைப்பாவைகளாக இருக்கும் தலைவர்கள் அதில் பங்கு கொள்ளுவது தெரியுமா? அதிகார போதையின் அடிமைகளான உங்கள் தலைவர்கள் உங்கள் வாழக்கை தரத்தை உயர்த்த என்ன செய்தார்கள் ? அவர்களின் சுக வாழ்வுக்கு உங்களது சாதாரண சண்டைகூட ஜாதி சண்டைகளாகவும் இன மோதல்களாகவும் மாற்ற படுவது தெரியுமா?

Thursday, 27 February 2014

காங்கிரஸ் கட்சி - நகைச்சுவை






















Paypal கணக்கு துவங்குவது எப்படி?


இது வரை  Paypal கணக்கு துவங்குவது என்பது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. உங்களுக்கு Paypal கணக்கு இருக்க உங்களிடம் Credit Card இருக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படைத் தேவையாக இருந்தது. இனிமேல் Credit Card  தேவையில்லை. 



இந்த தொடுப்பை க்லிக் செய்யவும் CLICK HERE

STEP 1: Signup Today எனும் லிங்கை க்லிக் செய்யவும்.
STEP 2:  “Business” எனும் மூன்றாவது பிரிவில் உள்ள “Get Started” எனும் buttonஐ க்லிக் செய்யவும்.
Business கணக்கில் தான் உங்களால் பிறரிடம் இருந்து அவர்களின் Credit Card வழியாக வரும் பணத்தைப் பெற முடியும்.
நீங்கள் பிற முறையான “Personal” “Premier” வகையான கணக்குகளையும் ஆரம்பிக்கலாம்.
STEP 3: பின்வரும் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
STEP 4: தங்களின் மின்னஞ்சளுக்கு ஒரு verification link  அனுப்பப்படும்.
STEP 5: பிறகு உங்களின் paypal கணக்கில் login செய்யவும்.
STEP 6: இது தான் மிகவும் முக்கியமான படி., Status: Unverified Get verified   இதில் “Get Verified” என்பதை க்லிக் செய்யவும்.
Paypal லில் Verified செய்யப்பட்ட கணக்கு இருந்தால் தான் உங்களால் பணத்தை $500 க்கு மேல் பரிவர்த்னை செய்ய இயலும்.
STEP 7: “Add Bank Account” எனும் பகுதியில் சென்று பின்வரும் விவரங்களைக் கொடுக்கவும்.
Account Number:
Account Holder Name:  உங்களின் paypal கணக்கில் இருக்கும் பெயரும், வங்கிக் கணக்கில் இருக்கும் பெயரும் ஒரே பெரியராக இருக்க வேண்டும்.
NEFT IFSC Code: இது உங்களின் வங்கி காசோலை புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருக்கும் அல்லது., இந்தத் தளத்தில் இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிக் கிளைகளின் IFSC எண்கள் உள்ளது.
http://bankifsccode.com/
http://www.indian-banks.info/
STEP 8: பிறகு “Add Bank Account” எனும் button ஐ க்லிக் செய்யவும்.
STEP 9:  Paypal நிறுவனம் உங்களின் வங்கி கணக்கிற்கு 2  பணப் பரிவர்த்னைகளை நிகழ்த்தும்.  அந்தப் பரிவர்த்னைகளின் பண மதிப்பு என்ன என்பதை  2-3 நாட்கள் கழித்து உங்களின் வங்கிக் கணக்கில் பார்க்கவும். பொதுவாக அந்தப் பண மதிப்பு 1.47 Rs. போன்று மூன்று இலக்க மதிப்பில் இருக்கும். அந்த மதிப்பை நீங்கள் உங்களின் Paypal கணக்கில் உள்ள “Confirm Bank” எனும் பகுதியில் சென்று கொடுக்கவேண்டும்.

அவ்வளவுதான், நீங்கள் இனி இணையம் வழியாக யாரிடமும் எந்த நாட்டில் இருந்தம் பணத்தைப் பெறலாம். அந்தப் பணத்தை எளிதாக உங்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றலாம்.

Tuesday, 25 February 2014

அர்னாப் போடும் கூச்சல் (குழாயடிச் சண்டை)



சென்னை: டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்சாமியை வசமாக ஒரு பிடி பிடித்து ஒரே நாளில் தேசம் முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஒரு தமிழர்.. அவர்... திருமுருகன் காந்தி. மே 17 இயக்கத்தின் தலைவர். ராஜீல் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டது மற்றும் அவர்கள் உள்பட சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது ஆகியவைதான் இன்று வட இந்திய ஊடகங்களால் பிரதானமாக பரப்புரை செய்யப்படுகின்றன. 

வட இந்திய ஊடகங்கள், குறிப்பாக டிவி சேனல்களில் விவாதம் என்ற பெயரில் அரங்கேற்றும் குழாயடிச் சண்டையில் இந்தத் தமிழர்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்கவே முடியாத சூழல் நிலவுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தூக்கு தண்டனை ரத்து தீர்ப்பை மிகக் கேவலமாக விமர்சித்துள்ளன டைம்ஸ் நவ் மற்றும் சிஎன்என் ஐபிஎன் ஆகியவை. குறிப்பாக அர்னாப் போடும் கூச்சல் சகிக்க முடியாதது. 'என் நாட்டு பிரதமரைக் கொன்றவர்களின் தூக்கு தண்டனையை எப்படி ரத்து செய்யலாம்' என்று மாரிலடித்துக் கொண்டு கேட்கிறார் அர்னாப். இது பச்சையான நீதிமன்ற அவமதிப்பு.

ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச நடுநிலைத் தன்மையே இல்லாத விவாதம் இது என மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உள்ளிட்டோர் தலையிலடித்துக் கொள்ளும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன இந்த விவாதங்கள்.

பொதுவாக இம்மாதிரி விவாதங்களில் பங்கேற்போரை முழுமையாகப் பேசவிட்டு, அவர்கள் சொல்ல வரும் கருத்துக்களைப் பெற்று, தேவையான இடத்தில் நிறுத்தி- மாற்றுக் கருத்து சொல்பவரைப் பேசவிடுவதுதான் நிகழ்ச்சி நடத்துபவர்களின் வேலை.

ஆனால் அர்னாப் மற்றும் ராஜ்தீப் சர்தேசாய்கள் நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் இறுதி வரை கத்திக் கொண்டே இருக்கிறார்கள். பேச வந்தவர்கள் தங்களின் கருத்துக்களை அப்படியே ஏற்க வேண்டும் என்கிற மாதிரி இருக்கிறது இவர்கள் நடத்தை. இதன் விளைவு, அது விவாதக் களமாக இல்லாமல் குழாயடிச் சண்டை நடக்கும் இடமாகவே காட்சி தருகிறது. நேற்றைய ஒரு விவாதத்தில், அர்னாப் கோஸ்சாமியின் பேச்சைப் பொறுக்க முடியாமல், விவாதத்திலிருந்தே வெளியேறினார் ராம் ஜெத்மலானி.

ஆனால் அந்த அர்னாபையே அலற வைத்த ஒருவர் நேற்று இன்னொரு விவாதத்தில் பங்கேற்றார். அவர்தான் மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி. அவர் கேட்ட எந்த கேள்விக்கும் அர்னாபிடம் விடையில்லை. கடைசியில் திருமுருகனைச் சமாளிக்க முடியாமல், அவர் மைக்கை ஆஃப் பண்ண மட்டும்தான் முடிந்தது அர்னாபால். இதோ திருமுருகன் காந்தி அர்னாபிடம் கேட்ட சில கேள்விகளும், அதற்கு அர்னாப் திரு திருவென விழித்ததும்....

திருமுருகன் காந்தி: மிஸ்டர் அர்னாப், காங்கிரஸ் எம்பி ராஜீவ் கொலை வழக்கில் எதற்காக மொத்த தேசத்தையும் திசை திருப்ப முயற்சிக்கிறீர்கள்... இந்தக் கொலையில் நேரடித் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு, ஆனால் இப்போது சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கும் சுப்பிரமணியன் சாமி, சந்திரா சாமியை ஏன் எந்த கேள்வியும் கேட்கவில்லை? ஜெயின் கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட இந்த இரு குற்றவாளிகளையும் ஏன் காப்பாற்றப் பாடுபடுகிறீர்கள்? வர்மா கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பாதுகாப்புக் குறைபாடுகள் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்?

அர்னாப்: இதற்கெல்லாம் நான் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. நான் சொல்வதை மட்டும் கேளுங்கள்..

திருமுருகன் காந்தி: ஆனால் நீங்கள் இந்த தேசத்துக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள் அர்னாப்...

அர்னாப்: ஒரு நிமிடம் நான் சொல்வதைக் கேளுங்கள்... அல்லது உங்கள் மைக் பிடுங்கப்படும்.

திருமுருகன் காந்தி: என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் யார்? இப்போது சிறையில் உள்ள ஏழு பேரும் அல்ல... இது விசாரணையில் தெரிந்துவிட்டது. ஆனால் உண்மையான குற்றவாளிகள் சந்திராசாமியும் சுப்பிரமணியசாமியும் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்னாப்: கீப் கொயட்... பேசாதீர்கள். இல்லாவிட்டால் உங்கள் மைக்கை செயலிழக்கச் செய்வேன்.

திருமுருகன் காந்தி: ஜெயின் கமிஷன் அறிக்கை பற்றி நீங்கள் பேச மறுப்பதேன்? வர்மா கமிஷன் அறிக்கையைப் பற்றி வாயே திறக்கமாட்டேன் என பிடிவாதம் பிடிப்பது ஏன்?

அர்னாப்: மிஸ்டர் காந்தி, மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள். இப்போது பேச வேண்டாம்.

திருமுருகன் காந்தி: ஏன் நான் பேசாமலிருக்க வேண்டும்... என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

அர்னாப்: உங்களோடு நான் விவாதிக்க விரும்பவில்லை. அவரிடமிருந்து மைக்கைப் பிடுங்குங்கள். இனி இந்த விவாதத்தில் உங்களோடு தொடர விரும்பவில்லை.


அர்னாப்புக்கு கொஞ்சமும் குறையாத ராஜ்தீப் சர்தேசாயையும் விட்டு வைக்கவில்லை திருமுருகன் காந்தி. அவரிடமும் சந்திராசாமி, சுப்பிரமணிய சாமியை விட்டுவிட்டு, அப்பாவிகளை போட்டு வதைப்பது ஏன் என கேட்டு திணறடித்தார் திருமுருகன் காந்தி. ஒரு தமிழ்த் தொலைக்காட்சியில் ஜெயின் கமிஷன் விவகாரத்தை சுப.வீரபாண்டியன் கிளப்பியபோது உடன் விவாதத்தில் இருந்த சுப்பிரமணிய சுவாமி பாதியிலேயே கிளம்பிச் சென்றது நினைவுகூறத்தக்கது.

Wednesday, 12 February 2014

திரைகடல் ஓடி திரவியம் தேடி !




திரைகடல் ஓடி திரவியம் தேடி !
கருவிழி மூடி கனவினை கொண்டாடு !!
காக்கையாய் கலைந்து தேடுகிறாய்
காரியிருள் இரவினில் ய்க்கிறாய்
சேர்த்துவைத்த சொந்தத்தில் ஒரு தேவதை!
தேடிவந்தால் சேர்த்துவைத்து கொண்டாடு !!
பாவிமகள் பாரவிடில் மரணவேதனை !
பாழும் வாழ்வே நரகவேதனை  !!
திரைகடல் ஓடி திரவியம் தேடு
திங்கள் அவள் இல்லையென்றால் தனிமைதனை கொண்டாடு
கடமைதனை கலங்காமல் முடித்திடு !

மரணத்தை மகிழ்வோடு அடைந்திடு !!!
Related Posts Plugin for WordPress, Blogger...