Brave Of Life தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, 31 July 2013

விவசாயத்துடன் துணைத்தொழில்கள்..

விவசாயத்துடன் துணைதொழில்களை இணைத்து ஒருங்கிணைந்த பண்ணையத் தொழில் செய்தால், விவசாயம் பொய்க்கும் போது, துணைதொழில்கள் மூலம் போதிய லாபம் பெறலாம்.


நெல் வயல், மானாவாரி மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு ஏற்ப, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தால், பயிர் சீசன் இல்லாத போதும் வருமானம் கிடைக்கும்

நெல்வயல் சார்ந்த பகுதியில் பண்ணை குட்டை அமைக்கலாம். செம்மைநெல் சாகுபடி மூலம் தண்ணீர் வயலுக்கு கிடைத்தாலும், மழை பெய்யும் நேரங்களில் வயலில் தேங்கும் நீரில் கசிவு இருக்கும். நெல்வயல் நடுவில், அரை ஏக்கரில் பண்ணை குட்டை அமைத்தால், பள்ளத்தில் தண்ணீர் நிரம்பும். இதில் மீன் வளர்க்கலாம். ஒரு ஏக்கர் நிலமிருந்தால் 10 சென்ட் அளவில், சிறுகுட்டை அமைக்கலாம். தண்ணீர் நன்றாக கிடைக்கும் போது, வாத்து வளர்ப்பது நல்லது. வான்கோழி, குறைந்த மாதங்களில் அதிக வளர்ச்சி பெறும் கோழி இனங்களை வளர்க்கலாம்.   குட்டையின் முகப்பில் கோழி, வாத்துகளுக்கு கூண்டு அமைத்தால், அதிலிருந்து வெளியேறும் எச்சக்கழிவுகள், மீன்களுக்கு உணவாகும். சாவியாகும் பதர், நெல்மணிகளை வாத்துகளுக்கு உணவளிக்கலாம். வீடுகளில் தேங்கும் காய்கறி, கீரை கழிவுகளை பொடியாக நறுக்கி தரலாம். தனியாக தீவனத்திற்கு செலவிட வேண்டியதில்லை.

மானாவாரி நிலத்தில் சோளம், கம்பு, பயறு தானியங்களுடன், வேலிமசால், குதிரைமசால் வளர்க்கலாம். இதற்கு ஆடு, மாடு வளர்ப்பு எளிதாக இருக்கும். வேலி, குதிரைமசால் தீவனங்களை இவற்றுக்கு தரலாம். இங்கு மீன்வளர்ப்புக்கு இயலாது. இதேபோல, தோட்டக்கால் பயறு வகைகளுடன் ஆடு, மாடு வளர்க்கலாம். தோட்டப்பயிர்களுக்கு நடுவே தேனீக்கள் வளர்ப்பும், லாபமான தொழிலாக இருக்கும்.


விளை நிலங்களில், இன்று ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற துணைத்தொழில்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. அண்மைக்காலமாக, மக்களிடையே அதிகரித்துள்ள இறைச்சி உணவுப் பழக்கம், இதுபோன்ற தொழில்களுக்கான தேவையை அதிகரித்து வருகின்றன. இதன்படி, தரையில் இருந்து, சில அடி உயரத்தில் பரண் அமைத்து, அதன் மீது ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. மேலும், ஆடு, வாத்து போன்றவை வளர்க்கும் தொழிலுக்கு, குறைந்த எண்ணிக்கையிலான ஆட்களே போதும் என்பதும் பலர் இத்தொழிலை நாட முக்கிய காரணமாக உள்ளது. விவசாயத்தை மட்டும் நம்பியிராமல், விவசாயம் சார்ந்த துணை தொழில்களை செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும்

பூரண மதுவிலக்கு - மாணவி நந்தினி

பூரண மதுவிலக்கை கோரி சட்டக்கல்லூரி மாணவி உள்பட 5 பேர் இன்று 3–வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர்.


தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வந்து மதுக்கடைகளை மூடக்கோரி மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி நேற்று முன்தினம் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்து சட்டக்கல்லூரி முன்பு ‘திடீர்’ என போராட்டத்தில் ஈடுபட்டார். அன்றிரவு 7.30 மணி அளவில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

அதன்பிறகு இரவு 10.30 மணிக்கு மீண்டும் அதே இடத்தில் தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். அதே சட்டக்கல்லூரி மாணவர் விஜிகுமாரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதை அறிந்த சாய்ஜோதி பாலிடெக்னிக் மாணவர் மோகன், லயோலா கல்லூரி மாணவர் ஜோ பிரிட்டோ, எஸ்.வி.என். கல்லூரி மாணவர் கருப்ப சாமி ஆகியோரும் நேற்று காலை நந்தினியுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். சமூக சேவகர் சசிபெருமாளும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டார். மதுக் கடைகளை மூடுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடக் கோரியும், தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் குறித்தும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருப்பதாக நந்தினி கூறியுள்ளார்.

இதேவேளை தமிழக கல்லூரி மாணவர்களின் தமிழ் ஈழத்திற்கு ஆதரவான போராட்டம் போன்று இம்மதுவுக்கு எதிரான போராட்டமும் தீவிரமடையும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. 

இவர்களுக்கு பொது மக்கள், சமூக அமைப்பினர், வக்கீல்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவிமணியன் மாணவியைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 செல்போன் மூலம் மதிமுக பொதுச்செயலர் வைகோவும் வாழ்த்து தெரிவித்தார். 

மனிதநேய மக்கள் கட்சி சார்பில், சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா மாணவியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

சட்டவிரோத கள்ளச் சாராயத்தால் பலர் தம்மைப் பலி கொடுத்துள்ளனர். அந்த வகையில் பூரண மதுவிலக்கைக் கொண்டு வருவதற்கான சாத்தியம் மிகக் குறைவாக இருக்கலாம். ஆனால் ஒரு சட்டத்துறை மாணவியின் தனித்த போராட்டத்தின் மூலம் இதை நடைமுறைப் படுத்த எல்லோரும் முன்வருவது என்பது சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாதது.  ஆனால் இப் போராட்டம் வெற்றிபெற இணைந்து கொள்ள வேண்டியது இன்னும் பல கரங்கள். அரசியலுக்கும், சுயலாபங்களுக்கும்  அப்பாலான மனித நேயங்கள்.

எந்த சாதி , அரசியல் , ஆண்  மற்றும் பெண் சாயம் பூசாமல் எந்த சதி வலையிலும் விழாமல்  இந்த   போராட்டத்தை வெற்றிப்பெறச்செய்வதன் மூலம் ஒரு முறையேனும் தமிழர்களின் ஒற்றுமை, போர்க்குணம், வீரம்,  விவேகம் மற்றும்  நாகரிகத்தை ஆட்சியாளர்களுக்கும் உலகுக்கும் தெரியப்படுத்துவோம் ..... 

Tuesday, 30 July 2013

வதந்(தீ)யில் நடிகை ...( செய்தி: நடிகை பற்றியல்ல)

கடந்த நாட்களில் செய்திதாள் மற்றும் முக நூலில் நடிகை கனகாவுக்கு  புற்று நோய்  என்றும் அதற்கான சிகிச்சைகளை கேரளா மாநிலத்தில் எடுத்துவருவதாகவும் மிகவும் வருத்ததுடன் செய்திகள் வந்தவண்ணம் இருந்தது. இந்நிலையில் நேற்று மதியம்   "புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை கனகா காலமானார்' என்று, "டிவி' சேனல்கள், வெளியிட்ட தகவல், தமிழகம் முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், உயிருடன் உள்ள நடிகை கனகா, ""நான் நலமுடன் உள்ளேன். ஆண்களை பிடிக்காததால், திருமணம் செய்து கொள்ளாமல், தனிமையில் வசித்து வருகிறேன். எனக்கு புற்றுநோய் இருப்பதாக கூறி, தேவதாஸ் என்பவர், என் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார்,'' என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

கடந்த,  1989 ல் வெளியான, "கரகாட்டக்காரன்' படத்தின் கதாநாயகியாக, தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை கனகா. "புருஷன் எனக்கு அரசன், துர்கா, சாமுண்டி, கும்பக்கரை தங்கையா, தாலாட்டு கேக்குதம்மா, அம்மன் கோவில் திருவிழா, சக்கரைத்தேவன்' உட்பட பல படங்களில், நடிகர்கள், ரஜினி, பிரபு, விஜயகாந்த், கார்த்திக், மம்முட்டி, மோகன்லால் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

பழம் பெரும் நடிகை தேவிகா இவரது தாய். நடிகை தேவிகா இறந்த பின், படங்களில் நடிப்பதை கனகா தவிர்த்தார். "கணவர்' என, கூறிய நபர் மற்றும் "ஆவி' அமுதா ஆகியோருடன் ஏற்பட்ட பிரச்னையால், மிகவும் வேதனைப்பட்டார். 2004ல் இருந்து, திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார்.

இந்நிலையில், "நடிகை கனகா புற்றுநோயால் அவதிப்படுகிறார். கேரளா மாநிலம், ஆலப்புழாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்' என, இரண்டு தினங்களுக்கு முன், தகவல் வெளியானது.

இந்நிலையில், நேற்று பிற்பகல், "நடிகை கனகா இறந்துவிட்டார்' என, சில தமிழக, "டிவி' சேனல்களில், "பிளாஷ் நியூஸ்' வெளியானது. இது, கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் நடிகை கனகா வீடு உள்ளது. அங்கு, பத்திரிகையாளர்கள் சென்றபோது, கனகா, அவர் வளர்க்கும் பூனைகளுக்கும், கோழிகளுக்கும் நிதானமாக தீனி போட்டுக் கொண்டு இருந்தார். அதிர்ச்சி அடைந்த பத்திரிகையாளர்கள், நடந்த விஷயம் குறித்து அவரிடம் விளக்கம் கேட்டனர். அப்போது நடிகை கனகா கூறியதாவது: நான், ஆலப்புழாவில் சிகிச்சை பெற்று வந்தாக கூறப்பட்டது, தவறான தகவல். நான், சென்னை வீட்டில் தான் இருகிறேன். எனக்கு புற்றுநோய் என, வதந்தி பரவியிருக்கிறது. நல்ல வேளை, "எய்ட்ஸ்' என்று செய்தி வரவில்லை. பத்திரிகைகளில் எனக்கு புற்றுநோய் என செய்தி வந்தது, வருத்தமாக இருக்கிறது. தற்போது, நான் இறந்துவிட்டதாக செய்தி வந்து இருப்பது, அதிர்ச்சியாக இருந்தாலும், உங்களின் (பத்திரிகையாளர்கள்) சந்திப்பால், நான் நல்லபடியாக இருப்பது, மக்களுக்கு தெரிந்துவிடும்; இது சந்தோஷமாக இருக்கிறது; யார் மீதும் நான் வருத்தப்பட்டு என்னவாகப் போகிறது. இவ்வாறு, நடிகை கனகா கூறினார்.

இப்படி செய்திகளின் உண்மை தன்மை அறியாமல் செய்தி பரப்புவது வருந்ததக்கது . எங்கே செல்கிறது நமது ஊடகங்கள் . விற்பனைக்காக எதுகை மோனகை செய்தி வெளியிடுவது , முக்கிய செய்திகளை இருட்டடிப்பது , வன்மம் உருவாக்கும் வகையில் செய்தி வெளியிவது போன்றவையே ஊடகங்களின் நம்பகத்தன்மை மற்றும் மதிப்பை குறைக்கிறது . இனிமேலாவது பொறுப்புடன் செயல்படுவார்களா ?

Monday, 29 July 2013

24 ம் புலிகேசி ( நகைச்சுவை )

காவலாளி 1: விருது கொடுத்ததுக்காகவா மன்னர் கோபமாருக்கிறார் ?

காவலாளி 2 : இருக்காத பின்னே சிறந்த கவிதை விருதுக்கு அனுப்பினால் 
                                     மொக்கை கவிதை   விருதுல கிடைச்சிருக்கு ....




காவலாளி 1: தலைமை  மந்திரி ஏன் வருத்தமாக இருக்கிறார் ?

காவலாளி 2 : புறமுதுகிட்டு இரண்டாவதாக ஓடி வந்தும்  மூன்றாம் பரிசு தான்                               மன்னர் கொடுத்தாராம் 

காவலாளி 1: என் அப்படி?

காவலாளி 2: முதல் பரிசு மன்னருக்கும் இரண்டாம் பரிசு மன்னருடைய                                             குதிரைக்கென்று சொல்லி மன்னரே வைத்துக்கொண்டாராம் 

Sunday, 28 July 2013

தங்கமே தங்கம்…

தங்கமே தங்கம்…தங்கம் வாங்க போறீங்களா..?! 


நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்” நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர்சொன்னது இதுதான்.

வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையா ளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! 

வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இத னை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாது என்று முழங்கி அவரும் காரிய த்தைச் சாதித்துக் கொண்டாராம்!

நண்பரின் ஆதங்கம் இதுதான். ‘சேதாரம் என்ற பெயரில் நகைக்கடைகளில் பெருங்கொள்ளையடிப் பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவ ரது நியாயமான கேள்வி” அவரது குமுறல் மிக நீதியானதே என்பது தான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிர ம் ரூபாய் வரையில் பெருங் கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். 

இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் “ஒன்பதாயிரம் ரூபாய்” தண்டம் அழ வேண்டும். 

ஏறக் குறைய 16 சதவீதம்? “எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிரா முக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?” எந்த அதி மேதாவியும் இது வரை கேள்வி கேட்டதி ல்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித் தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். 

போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை’ கூல்’ பண்ணு வார்கள். இப்பொழுதெ ல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலே யே பல்லா யிரக்கணக்கில் கொள்ளையடிப்பது…

சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு… உற்றுப் பார்த்தா ல் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடை ய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக் குள்ள உண்மை விலை யை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம் தான். 

16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக் கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? பல சரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? 

அவர்களிடம் வழி ப்பறி செய்வதைவிட மோச மான செயலல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டா ன்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்? மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக் காரனாக கொழுக்க முடிகிறது. 


இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப்படவேண்டும். விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்…! அதுவும் உங்களால் தான் முடியும்…!

நன்றி

தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு

முகநூல்

ஆரோக்கியமாக வாழ சத்தான உணவு...

பொதுவாக கஞ்சி, கூழ், பழைய சோறு ஆகியவைதான் அந்த காலத்து காலை உணவாக இருந்தது. அதனாலேயே அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம். ஆனால், தற்போது நாம் உண்ணும் காலை உணவு மிக மோசமான விஷயமாக மாறிவிட்டது. அவசரத்துக்கு ரொட்டி ஜாம் என்று போய், நூடூல்ஸ் என்ற அளவுக்கு மாறி விட்டோம்.

அவசர உலகத்தில் காலையில் இவ்வளவு தான் செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையில், நாம் உணவை சரியான முறையில் வகுத்துக் கொண்டால் ஆரோக்கியமான வாழ்க்கையை அடையலாம்.

இரண்டு அல்லது 4 நபர் கொண்ட குடும்பத்துக்கு எளிதான சத்தான காலை உணவை நிச்சயம் எளிதாகவே தயாரித்துவிடலாம். வாரத்தில் இரண்டு நாட்களாவது மூக்கடலை, காராமணி, ராஜ்மா, சோயா போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

இதனை தனியாக சமைக்க வேண்டாம். நீங்கள் எப்போதும் சமைக்கும் உருளைக் கிழங்கு வருவல், கத்திரிக்காய் முருங்கை பொறியல் போன்றவற்றில் மேற்கண்ட தானியங்களை சேர்த்து சமைக்கலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அதேப்போல, வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்கள் கண்டிப்பாக கீரை செய்யலாம். கீரையை கடைந்தால் யாருக்கும் பிடிக்கவில்லை என்று குறை கூறாமல், அதனை பொறியல் மற்றும் கூட்டாக செய்து, அதற்கு சரியாக வத்தக் குழம்பு, காரக் குழம்பு செய்தால் நிச்சயம் எல்லோருக்குமே பிடிக்கும்.

தானியமும் பயறும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் அதிலிருந்து கிடைக்கும் புரதச்சத்து, குணத்திலும், தரத்திலும் உயர்ந்திருக்கும். இட்லி, பொங்கல், அடை போன்றவைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

உணவில் தினமும் கீரை இருப்பது அவசியம். ஏனென்றால் அதிலிருந்து 5 வித சத்துக்கள் கிடைக்கிறது. விலையும் மற்ற காய்கறிகளை விட குறைவு. முருங்கைக் கீரை போன்றவைகளை வீட்டுத் தோட்டத்தில் இருந்தே பறித்துக் கொள்ளலாம். இது தவிர சலிப்பு ஏற்படாதபடி பொரியல், கூட்டு, மசியல், துவையல், பச்சடி, கிச்சடி, அடை, வடை, சப்பாத்தி போன்ற பல வகைகளை சாப்பிடலாம்.

தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவாகும். சருமம் பொன்னிறமாகும். எண்ணற்ற சத்து நிறைந்த கேரட்டில் இருந்து சுவையான அல்வா தயாரிக்கலாம். குழந்தைகள் இதனை விரும்பி உண்ணுவதோடு உடல் நலத்திற்கும் ஏற்றது. குறைந்த கொழுப்பு சத்து கொண்டது.

குழந்தைகளுக்கு சிறுவயது முதல் எல்லா காய்களையும் கொடுத்துப் பழக்கினால் 'காய் எனக்குப் பிடிக்காது' என்று சொல்லி அடம் பிடிக்காமல் சாப்பிடுவார்கள். காய்கள், பருப்பு ஆகியவை குழந்தைகளுக்கு பசியைத் தாங்கச் செய்யும். உடல் வளர்ச்சிக்கும் நல்லது.

புரோட்டின் நிறைந்த பயறுகள், பயறு காய்கள், அவரை வகைகளை 10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம்பெகள் தினமும் 30 முதல் 70 கிராம் வரைம், 13 முதல் 18 வயது வரையில் உள்ளவர்கள் தினமும் 50 முதல் 70 கிராம் வரைம் எடுத்துக்கொள்ள வேண்டும். புரோட்டினுக்கு மாற்று உணவாக அசைவத்தில் கறி, மீன் மற்றும் முட்டை – இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 முதல் 60 கிராம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சைவ உணவு மட்டுமே உட்கொள்பவர்கள் அதற்கு பதிலாக, முந்திரி போன்ற கொட்டை வகைகள் மற்றும் நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை 30 முதல் 50 கிராம் வரை சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் பொருட்களும் புரோட்டின் கிடைக்க உதவும்.

பச்சைப் பயறின் பலனை பலரும் அறிந்திருப்பர். அதனை ஊறவைத்து எடுத்து சாதாரண தட்டில் வைத்தாலே போதும், சில மணி நேரத்தில் முளை வந்து விடும். அதனை கூட்டு செய்து சாப்பிடலாம்.

இப்படி வாரத்தில் காய்கறி, தானியம், கீரை வகைகளை தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.


பல தாய்மார்கள், குழந்தைகளுக்கு சத்தாண உணவு அவசியம் என்பதை உணராமல், அவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக பாஸ்ட் புட் வகையறாக்களை சமைத்துக் கொடுக்கிறார்கள். இது மிகவும் தவறான போக்கு என்பதை நிச்சயம் உணர வேண்டும்.

கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில்.....

நீங்கள் கர்ப்பம் என்பது தற்போது உறுதிசெய்து இருக்கீறீர்கள் என்றால் உங்களுக்கு பலர் ஆலோசனை கூறுவார்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள்  மற்றும் நண்பர்கள் வட்டம் என அனைவரும் உணவு சம்பந்தமான அறிவுரையிலிருந்து அனைத்தையுமே கூறுவார்கள். உணவு வகைகள் அனைத்துயும்  சாப்பிட முடியாது. சாப்பிட நினைத்தாலே வாந்தி வரும் என பல மாறுதல்கள் நமது உடலுக்குள் நடக்கின்றது..



கர்ப்ப காலங்களில் பெண்களின் உடலில் உள்ள இரத்தத்தின் கொள்ளளவு 50 சதவிகிதம் அதிகமாகும். எனவே அவர்களுக்கு இந்த சமயத்தில் இரும்பு சத்து தேவை இரட்டிப்பாகும். உண்மையில், கர்ப்பம் இல்லாவிட்டாலும், பெண்களுக்கு ஆண்களை விட அதிக  இரும்பு சத்து தேவை. கர்ப்ப காலத்தில் போதிய இரும்பு சக்தி கிடைக்காவிடில், சிக்கல்கள் ஏற்படலாம்.

பாதாம் பருப்பில் இரும்பு, வைட்டமின்கள் மட்டும் இல்லாமல், செம்பும் இருக்கிறது. செம்பு ஹேமோகுளோபின் உற்பத்தியை ஊக்குவிக்கும். ஏழு பாதாம் பருப்புக்களை வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைத்து, பின் தோல்களை உரித்துக் கொள்ளவும். இவற்றை அரைத்து அந்த கூழ் பசையை தினமும் காலையில் மூன்று மாதங்களுக்கு சாப்பிட்டு வரவும்

கறுப்பு எள் இரும்புச்சத்து நிறைந்தது. இதில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அரைத்து, வடிகட்டி, சர்க்கரை சேர்த்த பாலுடன் அருந்தவும். தேன் அயச்சத்து நிறைந்தது. சோகைக்கு மருந்து. பூசணிக்காய் இரத்த இழப்பு, சிறுநீரில் ரத்தம் போதல் இவற்றை கண்டிக்கும். எனவே சோகை வராமல் தடுக்கப்படுகிறது. வெங்காயமும் சோகைக்கு மருந்தாகும். பேரிச்சம்பழம், வெல்லம் இவைகள் சோகையை போக்கும்.

கர்ப்ப காலங்களில் கால அட்டவணைப்படி நேரத்திற்கேற்ப நன்கு சாப்பிட வேண்டும். சரியான உணவு மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்வது மிக முக்கியமாகும்.அதுதான் சிசுவுக்கும் தாய்க்கும் சிறந்ததாகும்.

கருத்தரித்த ஆரம்பத்தில் இருந்தே கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மன அழுத்தம் ஏற்பட நேரிடும்.

கர்ப்பகாலத்தில் ஆபத்தை  விளைவிக்கும் சில உணவு வகைகளை தவிர்க்க வேண்டும் ஏனெனில் கர்ப்பகாலத்தில் ஒவ்வாத உணவுகள் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்  உணவாக உள்ளது..

கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் இதோ

சீஸ் வகைகள்

கர்ப்ப காலத்தில் சீஸ் வகைகளை தவிர்க்க வேண்டும். பல வகை சீஸ்கள் உள்ளது. மென்மையான பாலாடைக்கட்டியான வெள்ளை நிறத்ததில் உள்ள  பாலாடைக்கட்டியில் நீல நிறங்களை சேர்க்கின்றனர். வெண்ணெய் தயாரித்தலில் அச்சு பயன்படுத்தும் போது லிஸ்டீரியா சேர்க்கப்படுகிறது.  லிஸ்டீரியா சேர்ப்பது அரிதானது என்றாலும் நோய் தொற்றை ஏற்படுத்தி கருச்சிதைவு மற்றும் குழந்தை இறந்து பிறப்பதற்கும் வழிவகுக்கிறது. பல  உணவுகளில் லிஸ்டீரியா பயன்படுத்துவதால் பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. கர்ப்பிணி பெண்கள் வெண்ணெய் சாப்பிட விருப்பப்பட்டால் கடின  தன்மை கொண்ட வெண்ணையான சீதார்(நீலீமீபீபீணீக்ஷீ) பாலாடைக்கட்டியை சாப்பிடலாம். அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காது.

முட்டைகள்

கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் முட்டைகளை சாப்பிடலாம் ஆனால் நன்கு வேகவைக்காத முட்டைகள் சால்மோனெல்லா பாக்டீரியாவை  கொண்டிருப்பதால் சிசுவிற்கு தீங்கு விளைவிக்கும் ஆதலால் நன்கு வேகவைத்த முட்டைகளை எடுத்துக்கொள்வது சிறந்தது. நன்கு சமைக்கப்படாத  முட்டையுடன் சேர்த்த பொருட்களில் மேயனைஸ் கொண்டிருப்பதால் அவை கண்டிப்பாக கர்ப்ப காலத்தில் தவிர்க்க பட வேண்டியது. முட்டையின்  மஞ்சள் மற்றும் வெள்ளை கருவை நன்கு வேகவைத்த பின் சாப்பிட்டால் பாதுகாப்பானது.

வைட்டமின ஏ அதிகளவு கொண்டிருக்கும் உணவுகள்

முன்பு சாப்பிட்ட உணவுகளில் வைட்டமின் ஏ எடுத்துக்கொண்டதை விட குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக வைட்டமின் ஏ நிறைந்த  உணவுகள் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். கல்லீரல் போன்றவை அதிக வைட்டமின் ஏ கொண்டுள்ளது. 

குறிப்பிட்ட மீன் வகைகள்

தயார் நிலையில் வைக்கப்பட்ட மீன் வகைகளான டுனா, ஸ்வோர்டுபிஷ்ஷில் மற்றும் சுறா மீன்கள் போன்றவை குழந்தையின் நரம்பு மண்டலத்தை  பாதிக்கும் பாதரசத்தை உயர்ந்த அளவு கொண்டுள்ளது. எண்ணெய் பசை அடங்கிய மீன்களான சல்மான் பிரஷான டுனா கானாங்கொளுத்தி, ஆகியவை  பாதுகாப்பானது. வாரத்தில் ஒரு முறை சாப்பிடும் போது இரண்டு துண்டு மீன்களை எடுத்துக்கொள்ளலாம்.

காஃபின்

காஃபின் பல்வேறு உணவுகள் மற்றும் குளிர்பானங்களில் கலக்கப்படுகிறது. காஃபின் குறைந்த எடையுள்ள குழந்தை மற்றும் கருச்சிதைவு போன்ற  ஆபத்தை அதிகரிகும் ஆதலால் கவனமாக இருக்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும். இறுக்கமான ஆடைகளை அணிவதன் மூலம் இயல்பாக மூச்சு விட முடியாது. குழந்தைக்கும் அதிக அழுத்தம் தரக்கூடும். அதனால் இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்கலாம். நீங்கள் கர்ப்பம் தரித்த காலத்தில் அதிக வேலைகள் செய்வதை தவிர்த்து விடுங்கள். குறைந்த அளவு வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும்.

மாதா மாதம் கண்டிப்பாக மருத்துவமனை சென்று இரத்தப் பரிசோதனை செய்வது மிக அவசியம். இரத்தப் பரிசோதனை மூலம் சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்ள முடியும். வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிப் பெண்கள் இருக்கையில் அமர்ந்து வேலை செய்து விட்டு எழும்பும் போது கவனமாக எழ வேண்டும். வயிற்றில் ஏதேனும் அடிக்க நேரிடும். 

Friday, 26 July 2013

அமரர் கல்கியின் - சோலைமலை இளவரசி 4/20



வன்மம் வளர்ந்தது

சோலைமலை சமஸ்தானத்துக்கு ஆங்கிலேயர்கள் வந்து சேர்ந்த சமயம் சோலைமலை மகாராஜாவுக்கும் அந்தச் சமஸ்தானத்தை அடுத்திருந்த மாறனேந்தல் மகாராஜாவுக்கும் கொஞ்சம் மனத்தாங்கள் ஏற்பட்டிருந்தது. எல்லைத் தகராறு காரணமாக ஏற்பட்ட மனத் தாங்கல்தான். மேற்படி தகராறில் இரண்டு மூன்று தடவை சோலைமலை வீரர்களை மாறனேந்தல் வீரர்கள் முறியடித்துத் துரத்தியடித்து விட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் மாறேனந்தல் மகாராஜாவின் மூத்த புதல்வனான யுவமகாராஜா உலகநாத சுந்தரபாண்டியத் தேவனின் துடுக்கும் அகம்பாவமும்தான் என்று தெரிய வந்தது.சோலைமலை மகாராஜா தம்முடைய ஏக புதல்வியான பரிமள மாணிக்கவல்லி தேவியை மாறனேந்தல் இளவரசனுக்குக் கல்யாணம் செய்விக்கலாம் என்று ஒரு காலத்தில் எண்ணியிருந்ததுண்டு. மாறனேந்தல் வம்சம் அந்தஸ்திலும் பூர்வீகத்திலும் சோலைமலை வம்சத்துக்குக் கொஞ்சம் தாழ்ந்ததாயிருந்தபோதிலும் பக்கத்துச் சமஸ்தானமாயிருப்பதால் தம் உயிருக்குயிரான அருமைப் புதல்வியை அடிக்கடி பார்ப்பதற்கு வசதியாயிருக்கும் என்ற அந்தரங்க ஆசையினால் மேற்கண்ட யோசனை அவர் மனத்தில் உதித்தது. ஆனால் அந்த எண்ணமெல்லாம் இப்போது அடியோடு மாறிவிட்டது. தன் அருமை மகள் வாழ்நாள் எல்லாம் கன்னிகையாகவே இருக்க நேர்ந்து சோலைமலை சமஸ்தானம் சந்ததியின்றி அழிந்து போனாலும் சரி மாறனேந்தல் இளவரசனுக்கு அவளை மணம் செய்து கொடுப்பதில்லையென்று தீர்மானித்தார்.

தம்மை அவமதித்த மாறனேந்தல் மகாராஜாவையும் அவருடைய மகனையும் பழிக்குப் பழி வாங்கி அந்த வம்சத்தையே பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்ற வன்மம் அவர் மனத்தில் தோன்றி வைரம் பாய்ந்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. மாறனேந்தல் சமஸ்தானத்தைப் பற்றிச் சோலை மலை மகாராஜாவின் மனோநிலையைத் தெரிந்து கொண்ட அவருடைய வெள்ளைக்காரச் சிநேகிதர்கள் கொஞ்சங் கொஞ்சமாக அந்த வன்மத்துக்குத் தூபம் போட்டு வளர்த்தார்கள். மாறனேந்தலைப் பழிதீர்க்கத் தங்களுடைய உதவியை அளிக்கவும் முன்வந்தார்கள். இதன்பேரில் சோலைமலை மகாராஜாவுக்கும் கும்பெனியாருக்கும் சிநேக உடன்படிக்கை ஏற்பட்டது. ஒருவருடைய சிநேகிதர்களும் பகைவர்களும் மற்றவருக்கும் சிநேகிதர்கள் - பகைவர்கள் என்றும் யுத்தம் நேர்ந்தால் ஒருவருக்கொருவர் சகாயம் செய்து கொள்ள வேண்டும் என்றும் முக்கியமாக மாறனேந்தல் வம்சத்தின் கொட்டத்தை அடக்கச் சோலைமலை மகாராஜாவுக்குக் கும்பெனியார் உதவி செய்வார்கள் என்றும் உடன்படிக்கையில் கண்டிருந்தது. அதற்குப் பதிலாகச் சோலைமலை சமஸ்தானத்தில் கும்பெனியாருக்குச் சிற்சில விசேஷ உரிமைகளும் சலுகைகளும் அளிக்கப்பட்டன.

இந்தச் செய்திகள் எல்லாம் மாறனேந்தல் யுவராஜ உலகநாதத் தேவனுக்குத் தெரிய வந்தபோது அந்த இளங்காளையின் அகம்பாவமும் வாய்த்துடுக்கும் பன்மடங்கு அதிகமாயின. சோலைமலை ராஜாவைப் பற்றி அவன் நாலுபேர் முன்னிலையில் பகிரங்கமாக அவதூறு சொல்லவும் பரிகாசமாய்ப் பேசவும் ஆரம்பித்தான். சோலைமலை ராஜாவின் மூளை கலங்கிவிட்டது என்றும் அரண்மனைக் கோயிலில் இருந்த அம்மன் விக்கிரகத்தை அப்புறப்படுத்திவிட்டு அங்கே விக்டோ ரியா மகாராணியின் படத்தை வைத்துத் தினம் மூன்று தடவை பூசை செய்கிறார் என்றும் வெள்ளைக்காரனைக் கண்டால் உடனே விழுந்து கும்பிடுகிறார் என்றும் வெள்ளைக்காரனைப் பார்த்துக் குரைத்த குற்றத்துக்காக அவருடைய அரண்மனையில் இருந்த வேட்டை நாய்கள் எல்லாவற்றையும் சுட்டுக் கொன்றுவிட்டார் என்றும் லண்டனில் தெருக்கூட்டிக் கொண்டிருந்த வெள்ளைக்காரத் தோட்டியின் மகனுக்குச் சோலைமலை இளவரசியைக் கலியாணம் செய்து கொடுக்கப் போகிறார் என்றும் அர்த்த ராத்திரியில் திடீரென்று தூக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்து மேற்குத் திசையை நோக்கிப் 'பளீர் பளீர்' என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிறார் என்றும் - இப்படியெல்லாம் மாறனேந்தல் இளவரசன் நாலுபேர் முன்னிலையில் பரிகாசமாகப் பேசிச் சிரித்த செய்திகள் காற்றிலே மிதந்து வந்து சோலைமலை மகாராஜாவின் காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல் பாய்ந்தன.

மேற்படி செய்திகளினால் எல்லாம் மகாராஜா வீரராமலிங்கத் தேவருக்குத் தம்முடைய புதிய சிநேகிதர்களான வெள்ளைக்காரத் துரைகள் மீதோ கும்பெனி சர்க்கார் மீதோ கோபம் வரவில்லை. மாறனேந்தல் மகாராஜாவிடமும் யுவராஜாவிடமுந்தான் அளவில்லாத கோபம் பொங்கிப் பெருகிற்று. அவர்களை நினைக்கும் போதெல்லாம் அவர் இரணியகசிபு இராவணன் சூரபத்மன் முதலான இராட்சஸர்களுடைய சுபாவத்தை அடைந்து அவர்களைக் கண்ட துண்டமாக வெட்டிக் கொன்று தின்றுவிட வேண்டும் என்பதாக அளவுகடந்த வெறிகொள்ளத் தொடங்கினார். உரிய காலத்தில் சோலைமலை மகாராஜாவுக்குத் தமது மனோரதத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. ஏதோ ஒரு வியாஜ்யத்தை வைத்துக்கொண்டு கும்பெனியாரின் படைகள் மாறனேந்தல் கோட்டையைத் தாக்கின. அந்தப் படைகளில் சோலைமலை மகாராஜாவின் வீரர்களும் சேர்ந்து கொண்டிருந்தார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. மாறனேந்தல் வீரர்கள் கோட்டைக்குள்ளேயிருந்து ஒப்பற்ற வீரத்துடனே போர் புரிந்தார்கள். ஆனாலும் கும்பெனிக்காரர்கள் கொண்டுவந்த நெருப்பைக் கக்கும் பீரங்கிகளுக்கு முன்னால் எந்தக் கோட்டைதான் அதிககாலம் தாக்குப்பிடித்து நிற்கமுடியும் எத்தகைய வீரர்கள்தான் எதிர்த்து நிற்கமுடியும்

கோட்டை விழுந்தது விழுவதற்கு முன்னால் மாறனேந்தல் மகாராஜா தம் முத்தபுதல்வனான இளவரசனைக் கூப்பிட்டு "குழந்தாய் இனிமேல் நம்பிக்கைக்கு இடமில்லை. மாறனேந்தல் வம்சம் விளங்குவதற்கு நீ ஒருவனாது பிழைத்திருக்க வேண்டும். கோட்டையின் இரகசிய வழியின் மூலமாகத் தப்பி ஓடிச் சிலகாலம் தலைமறைவாக இருந்துகொள். தக்க சந்தர்ப்பம் பார்த்து அந்தச் சோலைமலை ராட்சதனையும் அவனுக்குத் துணையாக வந்த வெள்ளை மூஞ்சிக் குரங்குகளையும் பழிவாங்கு" என்று சொல்லி அவ்விதமே அவனிடம் வாக்குறுதி பெற்று கொண்டார். பதிலுக்கு இளவரசன் "அப்பா நீங்களும் எனக்கு ஒரு வாக்குறுதி தரவேண்டும். நான் கோட்டையிலிருந்து வெளியேறிய பிறகு சண்டையை நிறுத்தி விடுங்கள். வீரப்போர் புரிந்து தோல்வியடைவதில் அவமானம் ஒன்றும் இல்லை. சோலைமலை மகாராஜா எப்படியும் இந்த நாட்டிலே பிறந்து வளர்ந்தவர். பழைய மறவர் பெருங்குடியைச் சேர்ந்தவர். தங்களையும் நம் குடும்பத்தாரியும் அந்நியர்களாகிய வெள்ளைக்காரர்கள் அவமதிப்பாக நடத்துவதற்கு அவர் சம்மதிக்க மாட்டார். நமக்கும் ஒரு காலம் கூடிய சீக்கிரத்தில் வந்தே தீரும். வடதேசத்திலே இந்த வெள்ளை மூஞ்சிகளை நாட்டை விட்டுத் துரத்துவதற்காக அநேக பெரியபெரிய மகாராஜாக்களும் நவாப்புகளும் சேர்ந்து யோசனை செய்து வருகிறார்களாம். அவர்களிடம் போய் நானும் சேர்ந்து கொள்ளுகிறேன். பெரிய படை சேர்த்துக் கொண்டு திரும்பி வருகிறேன். அதுவரையில் தாங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.

தந்தை அதற்குச் சரியான பதில் சொல்லாமல் "சமயோசிதம் போல் பார்த்துக் கொள்கிறேன். எங்களைப் பற்றிக் கவலைப்படாதே நீ உடனே புறப்படு" என்றார். வெளி நாட்டிலிருந்து வந்த பகைவர்களாவது தயவு தாட்சண்யம் காட்டுவார்கள். உள்ளூர்ப் பகைவர்களிடம் சிறிதும் கருணையை எதிர்பார்க்க முடியாது என்னும் உண்மையை வயது முதிர்ந்த மாறனேந்தல் மகாராஜா அறிந்திருந்தார். ஆனால் அந்தச் சமயம் அதைப்பற்றித் தம் குமாரனிடம் வாக்குவாதம் செய்ய அவர் விரும்பவில்லை. மாறனேந்தல் இளவரசன் கோட்டையின் இரகசிய வழியாக அன்றிரவே வெளியேறினான். கோட்டையிலிருந்து இரண்டு காத தூரத்தில் இருந்த மேற்கு மலைத் தொடரை அடைந்து அங்குள்ள காடுகளில் சில காலம் ஒளிந்திருக்கலாம் என்ற எண்ணத்துடன் விரைந்து சென்றான். ஆனால் பொழுது புலரும் சமயத்தில் எதிர்ப்புறத்திலிருந்து மாறனேந்தல் முற்றுகையில் சேர்ந்து கொள்வதற்காக வந்த கும்பெனிப் படை வீரர்களில் ஒருவன் சாலை ஓரமாக ஒளிந்து சென்ற இளவரசனைப் பார்த்து விட்டான். யுத்தகால தர்மப்படை "யாரடா அங்கே போகிறவன்" என்று கேட்டான். அவனுக்கு மறுமொழி சொல்லாமல் இளவரசன் காட்டிலே புகுந்து ஓடினான். கும்பெனி வீரர்களின் சந்தேகம் அதிகமாயிற்று. படைத் தலைவன் அவனைத் துரத்திப் பிடித்துக் கொண்டு வரும்படி ஆறு வீரர்களை நிறுத்திவிட்டு மற்றவர்களுடன் மேலே சென்றன.

தன்னைத் தொடர்ந்து ஆறு வீரர்கள்தான் வருகிறார்கள் என்பது இளவரசனுக்குத் தெரியாது. தான் மாறனேந்தல் இளவரசன் என்பதாகத் தெரிந்து கொண்டு ஒரு பெரிய படை தன்னைத் தொடர்ந்து வருவதாகவே நினைத்தான். அவர்களிடம் எப்படியும் அகப்படக்கூடாது என்று மனத்தை உறுதி செய்து கொண்டு அடர்ந்த காடுகளில் புகுந்து ஓடினான். கடைசியாக சோலைமலையின் அடிவாரத்தை அடைந்தான். சற்றுத் தூரத்தில் சோலைமலைக்கோட்டை தென்பட்டது. அதன் சமீபத்தில் போவதற்கே அவனுக்கு இஷ்டமில்லாமலிருந்தாலும் வேறு வழி ஒன்றும் காணவில்லை. அந்தக் கோட்டை மதிலின் ஓரமாகச் சென்று கோட்டையைக் கடந்து போனால் தான் அப்பால் மலை மேல் ஏறுவதற்குச் சௌகரியமான சரிந்த பாறை இருந்தது. இளவரசன் அப்போது வந்து சேர்ந்திருந்த இடத்தில் பாறை செங்குத்தாகக் கிளம்பியது. சற்று நின்று யோசித்த பிறகு பின்னால் சமீபத்தில் கேட்ட காலடிச் சத்தத்தினால் உந்தப்பட்டவனாய் இளவரசன் மேலும் விரைந்தான். அவனுடைய கால்கள் கெஞ்சின; தலை சுழன்றது; கண்கள் இருண்டு வந்தன. கோட்டை மதிலை அடுத்திருந்த குறுகலான வழியில் அவன் போய்க் கொண்டிருந்தான். பின்னால் காலடிச் சத்தம் விநாடிக்கு விநாடி நெருங்கி வந்து கொண்டிருந்தது. மேலே ஓர் அடி கூட இனிமேல் நடக்க முடியாது என்று தோன்றியது. ஒரு பக்கம் கோட்டைச் சுவரும் மற்றொரு பக்கம் 'கிடுகிடு' பள்ளமுமாக இருந்த அந்தக் குறுகிய பாதையில் அப்பால் இப்பால் நகர்ந்து தப்புவதற்கு வழியே இல்லை. வேட்டை நாய்களைப் போல் தன்னைத் துரத்திக்கொண்டு வரும் எதிரி வீரர்களிடம் அகப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

கூந்தல் பராமரிப்பு ...4

தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.


கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும். 

தேநீரில் வடக்கத்திய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாரை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும். 

குழந்தைகளுக்கு பேன் தொல்லை அதிகமாக இருந்தால் சீத்தாப்பழக் கொட்டையை இரண்டு நாட்கள் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் கலந்து தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

சோற்றுக் கற்றாழையை கீறி அதன் நடுவில் வெந்தயம் வைத்து இரண்டு பக்கமும் கயிறால் மூடி கட்டி விட வேண்டும். கறுப்பு உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் ஊறவைத்த கறுப்பு உளுந்து, முளை கட்டிய வெந்தயம், சோற்றுக் கற்றாழை கூழ் இவை மூன்றையும் அரைத்து அதனுடன் செம்பருத்தி இலையையும் சேர்த்து பேக் போல தலையில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளித்தால் வெயிலின் கடுமையால் வரும் நுனி முடியின் வெடிப்பை சரி செய்யலாம்.

தேங்காய் எண்ணை ஒரு லிட்டர், நல்லெண்ணை ஒரு லிட்டர் எடுத்து அதனுடன் நெல்லிக்காய் சாறு 1/2 லிட்டர் சேர்த்து நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி வாரத்தில் இருமுறை தலையில் தேய்த்து வர இளநரை வருவதை தவிர்க்கலாம்.

பொடுதலைக்கீரை, முருங்கைக்கீரை, பாலக்கீரை இந்த மூன்றையும் அரைத்து, பின்னர் சோயா பவுடர், நன்னாரி பவுடர், நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றுடன் கலக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு, தேவைக்கு நீர் கலந்து தலையில் பேக் போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு நீங்கி விடும்.

முடிகொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும் புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும். முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து ,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் கூந்தல் பளபளப்பாகும்.

முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த, உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும்.

பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

ஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும்பு சத்து குறைவான உணவு பழக்கவழக்கம். மன உளைச்சல், கோபம், படபடப்பு. கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள். கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த சீப்பை பயன்படுத்துவது. அளவுக்கதிகமான வெயில், உப்புக் காற்று, குளோரின் கலந்த நீர் மற்றும் சுற்றுப்புற மாசு ஆகியவையே  கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள்

பெண்களுக்கு முடி கொட்டுவது தீராத பிரச்னையாக உள்ளது. முடி நன்கு வளர வேண்டுமானால், புரோட்டீன் சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இச்சத்து குறைவதால் தான் முடி உதிர்கிறது.

எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். சிறிது நல்லெண்ணையில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறிது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். முடி உதிர்வதையும் தடுக்கலாம்.

வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.

இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.

தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.

வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து ஃபிட்ஜில் வைத்து கொள்ளுங்கள் தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊறவிட்டு ஷாம்பு போட்டு நன்கு அலசிவிடுங்கள் ஷாம்பு தினமும் போட வேண்டிய அவசியமில்லை இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும். நிச்சயமாக முடி கொட்டுவுது நின்றுவிடும்.

வெந்தயம், வேப்பிலை, கறிவேப்பிலை, பாசிப்பயறு, ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயிலில் காயவைத்து மிஷினில் கொடுத்து மைய அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை கூந்தலில் தேய்த்து அலச, உங்கள் கூந்தல் பளபளப்பாகும்.

பெரும்பாலானவர்களுக்கு சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறது. சிலருக்கு வம்சா வளியாகவும் நரை வருவதுண்டு. கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல் போன்றவற்றால் பித்த நரை உண்டாகும். வைட்டமின் பி12 நரையை போக்கவல்லது.

மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். 

இளநரை நீங்க  நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். 

கறிவேப்பிலையை ஒருநாள் விட்டு ஒருநாள் துவையல் அரைத்து சாப்பிட வேண்டும். காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும். 
Related Posts Plugin for WordPress, Blogger...