Brave Of Life தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, 27 February 2014

காங்கிரஸ் கட்சி - நகைச்சுவை






















Paypal கணக்கு துவங்குவது எப்படி?


இது வரை  Paypal கணக்கு துவங்குவது என்பது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. உங்களுக்கு Paypal கணக்கு இருக்க உங்களிடம் Credit Card இருக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படைத் தேவையாக இருந்தது. இனிமேல் Credit Card  தேவையில்லை. 



இந்த தொடுப்பை க்லிக் செய்யவும் CLICK HERE

STEP 1: Signup Today எனும் லிங்கை க்லிக் செய்யவும்.
STEP 2:  “Business” எனும் மூன்றாவது பிரிவில் உள்ள “Get Started” எனும் buttonஐ க்லிக் செய்யவும்.
Business கணக்கில் தான் உங்களால் பிறரிடம் இருந்து அவர்களின் Credit Card வழியாக வரும் பணத்தைப் பெற முடியும்.
நீங்கள் பிற முறையான “Personal” “Premier” வகையான கணக்குகளையும் ஆரம்பிக்கலாம்.
STEP 3: பின்வரும் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
STEP 4: தங்களின் மின்னஞ்சளுக்கு ஒரு verification link  அனுப்பப்படும்.
STEP 5: பிறகு உங்களின் paypal கணக்கில் login செய்யவும்.
STEP 6: இது தான் மிகவும் முக்கியமான படி., Status: Unverified Get verified   இதில் “Get Verified” என்பதை க்லிக் செய்யவும்.
Paypal லில் Verified செய்யப்பட்ட கணக்கு இருந்தால் தான் உங்களால் பணத்தை $500 க்கு மேல் பரிவர்த்னை செய்ய இயலும்.
STEP 7: “Add Bank Account” எனும் பகுதியில் சென்று பின்வரும் விவரங்களைக் கொடுக்கவும்.
Account Number:
Account Holder Name:  உங்களின் paypal கணக்கில் இருக்கும் பெயரும், வங்கிக் கணக்கில் இருக்கும் பெயரும் ஒரே பெரியராக இருக்க வேண்டும்.
NEFT IFSC Code: இது உங்களின் வங்கி காசோலை புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருக்கும் அல்லது., இந்தத் தளத்தில் இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிக் கிளைகளின் IFSC எண்கள் உள்ளது.
http://bankifsccode.com/
http://www.indian-banks.info/
STEP 8: பிறகு “Add Bank Account” எனும் button ஐ க்லிக் செய்யவும்.
STEP 9:  Paypal நிறுவனம் உங்களின் வங்கி கணக்கிற்கு 2  பணப் பரிவர்த்னைகளை நிகழ்த்தும்.  அந்தப் பரிவர்த்னைகளின் பண மதிப்பு என்ன என்பதை  2-3 நாட்கள் கழித்து உங்களின் வங்கிக் கணக்கில் பார்க்கவும். பொதுவாக அந்தப் பண மதிப்பு 1.47 Rs. போன்று மூன்று இலக்க மதிப்பில் இருக்கும். அந்த மதிப்பை நீங்கள் உங்களின் Paypal கணக்கில் உள்ள “Confirm Bank” எனும் பகுதியில் சென்று கொடுக்கவேண்டும்.

அவ்வளவுதான், நீங்கள் இனி இணையம் வழியாக யாரிடமும் எந்த நாட்டில் இருந்தம் பணத்தைப் பெறலாம். அந்தப் பணத்தை எளிதாக உங்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றலாம்.

Tuesday, 25 February 2014

அர்னாப் போடும் கூச்சல் (குழாயடிச் சண்டை)



சென்னை: டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்சாமியை வசமாக ஒரு பிடி பிடித்து ஒரே நாளில் தேசம் முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஒரு தமிழர்.. அவர்... திருமுருகன் காந்தி. மே 17 இயக்கத்தின் தலைவர். ராஜீல் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டது மற்றும் அவர்கள் உள்பட சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது ஆகியவைதான் இன்று வட இந்திய ஊடகங்களால் பிரதானமாக பரப்புரை செய்யப்படுகின்றன. 

வட இந்திய ஊடகங்கள், குறிப்பாக டிவி சேனல்களில் விவாதம் என்ற பெயரில் அரங்கேற்றும் குழாயடிச் சண்டையில் இந்தத் தமிழர்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்கவே முடியாத சூழல் நிலவுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தூக்கு தண்டனை ரத்து தீர்ப்பை மிகக் கேவலமாக விமர்சித்துள்ளன டைம்ஸ் நவ் மற்றும் சிஎன்என் ஐபிஎன் ஆகியவை. குறிப்பாக அர்னாப் போடும் கூச்சல் சகிக்க முடியாதது. 'என் நாட்டு பிரதமரைக் கொன்றவர்களின் தூக்கு தண்டனையை எப்படி ரத்து செய்யலாம்' என்று மாரிலடித்துக் கொண்டு கேட்கிறார் அர்னாப். இது பச்சையான நீதிமன்ற அவமதிப்பு.

ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச நடுநிலைத் தன்மையே இல்லாத விவாதம் இது என மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உள்ளிட்டோர் தலையிலடித்துக் கொள்ளும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன இந்த விவாதங்கள்.

பொதுவாக இம்மாதிரி விவாதங்களில் பங்கேற்போரை முழுமையாகப் பேசவிட்டு, அவர்கள் சொல்ல வரும் கருத்துக்களைப் பெற்று, தேவையான இடத்தில் நிறுத்தி- மாற்றுக் கருத்து சொல்பவரைப் பேசவிடுவதுதான் நிகழ்ச்சி நடத்துபவர்களின் வேலை.

ஆனால் அர்னாப் மற்றும் ராஜ்தீப் சர்தேசாய்கள் நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் இறுதி வரை கத்திக் கொண்டே இருக்கிறார்கள். பேச வந்தவர்கள் தங்களின் கருத்துக்களை அப்படியே ஏற்க வேண்டும் என்கிற மாதிரி இருக்கிறது இவர்கள் நடத்தை. இதன் விளைவு, அது விவாதக் களமாக இல்லாமல் குழாயடிச் சண்டை நடக்கும் இடமாகவே காட்சி தருகிறது. நேற்றைய ஒரு விவாதத்தில், அர்னாப் கோஸ்சாமியின் பேச்சைப் பொறுக்க முடியாமல், விவாதத்திலிருந்தே வெளியேறினார் ராம் ஜெத்மலானி.

ஆனால் அந்த அர்னாபையே அலற வைத்த ஒருவர் நேற்று இன்னொரு விவாதத்தில் பங்கேற்றார். அவர்தான் மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி. அவர் கேட்ட எந்த கேள்விக்கும் அர்னாபிடம் விடையில்லை. கடைசியில் திருமுருகனைச் சமாளிக்க முடியாமல், அவர் மைக்கை ஆஃப் பண்ண மட்டும்தான் முடிந்தது அர்னாபால். இதோ திருமுருகன் காந்தி அர்னாபிடம் கேட்ட சில கேள்விகளும், அதற்கு அர்னாப் திரு திருவென விழித்ததும்....

திருமுருகன் காந்தி: மிஸ்டர் அர்னாப், காங்கிரஸ் எம்பி ராஜீவ் கொலை வழக்கில் எதற்காக மொத்த தேசத்தையும் திசை திருப்ப முயற்சிக்கிறீர்கள்... இந்தக் கொலையில் நேரடித் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு, ஆனால் இப்போது சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கும் சுப்பிரமணியன் சாமி, சந்திரா சாமியை ஏன் எந்த கேள்வியும் கேட்கவில்லை? ஜெயின் கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட இந்த இரு குற்றவாளிகளையும் ஏன் காப்பாற்றப் பாடுபடுகிறீர்கள்? வர்மா கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பாதுகாப்புக் குறைபாடுகள் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்?

அர்னாப்: இதற்கெல்லாம் நான் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. நான் சொல்வதை மட்டும் கேளுங்கள்..

திருமுருகன் காந்தி: ஆனால் நீங்கள் இந்த தேசத்துக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள் அர்னாப்...

அர்னாப்: ஒரு நிமிடம் நான் சொல்வதைக் கேளுங்கள்... அல்லது உங்கள் மைக் பிடுங்கப்படும்.

திருமுருகன் காந்தி: என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் யார்? இப்போது சிறையில் உள்ள ஏழு பேரும் அல்ல... இது விசாரணையில் தெரிந்துவிட்டது. ஆனால் உண்மையான குற்றவாளிகள் சந்திராசாமியும் சுப்பிரமணியசாமியும் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்னாப்: கீப் கொயட்... பேசாதீர்கள். இல்லாவிட்டால் உங்கள் மைக்கை செயலிழக்கச் செய்வேன்.

திருமுருகன் காந்தி: ஜெயின் கமிஷன் அறிக்கை பற்றி நீங்கள் பேச மறுப்பதேன்? வர்மா கமிஷன் அறிக்கையைப் பற்றி வாயே திறக்கமாட்டேன் என பிடிவாதம் பிடிப்பது ஏன்?

அர்னாப்: மிஸ்டர் காந்தி, மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள். இப்போது பேச வேண்டாம்.

திருமுருகன் காந்தி: ஏன் நான் பேசாமலிருக்க வேண்டும்... என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

அர்னாப்: உங்களோடு நான் விவாதிக்க விரும்பவில்லை. அவரிடமிருந்து மைக்கைப் பிடுங்குங்கள். இனி இந்த விவாதத்தில் உங்களோடு தொடர விரும்பவில்லை.


அர்னாப்புக்கு கொஞ்சமும் குறையாத ராஜ்தீப் சர்தேசாயையும் விட்டு வைக்கவில்லை திருமுருகன் காந்தி. அவரிடமும் சந்திராசாமி, சுப்பிரமணிய சாமியை விட்டுவிட்டு, அப்பாவிகளை போட்டு வதைப்பது ஏன் என கேட்டு திணறடித்தார் திருமுருகன் காந்தி. ஒரு தமிழ்த் தொலைக்காட்சியில் ஜெயின் கமிஷன் விவகாரத்தை சுப.வீரபாண்டியன் கிளப்பியபோது உடன் விவாதத்தில் இருந்த சுப்பிரமணிய சுவாமி பாதியிலேயே கிளம்பிச் சென்றது நினைவுகூறத்தக்கது.

Wednesday, 12 February 2014

திரைகடல் ஓடி திரவியம் தேடி !




திரைகடல் ஓடி திரவியம் தேடி !
கருவிழி மூடி கனவினை கொண்டாடு !!
காக்கையாய் கலைந்து தேடுகிறாய்
காரியிருள் இரவினில் ய்க்கிறாய்
சேர்த்துவைத்த சொந்தத்தில் ஒரு தேவதை!
தேடிவந்தால் சேர்த்துவைத்து கொண்டாடு !!
பாவிமகள் பாரவிடில் மரணவேதனை !
பாழும் வாழ்வே நரகவேதனை  !!
திரைகடல் ஓடி திரவியம் தேடு
திங்கள் அவள் இல்லையென்றால் தனிமைதனை கொண்டாடு
கடமைதனை கலங்காமல் முடித்திடு !

மரணத்தை மகிழ்வோடு அடைந்திடு !!!

Tuesday, 4 February 2014

கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே !!!




ஆண்:    கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
உன்கூட கொஞ்சம் நானும் வரேன் கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு வாரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா


பெண்:    கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள
நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
தூபத்தாலே தேச்சு வெச்சேன் ஒரு வீரமா
நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா


பெண்:    சாதத்துல கல்லுபோல நெஞ்சுக்குள்ள நீ இருந்த
சலிக்காம சதி பண்ணுற


ஆண்:    சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட
உறுத்தாம உயிர் கொல்லுற


பெண்:   அதிகம் பேசமா அளந்து நான் பேசி
எதுக்கு சடபின்னுர


ஆண்:    சல்லிவேர ஆணி வேராக்குற
சட்டபூவ வாசமா மாத்துற


பெண்:   நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற

ஆண்:   கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே

பெண்:   நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன

ஆண்:   எங்கவேணா போய்கோ நீ என்ன விட்டு போயிடாம இருந்தாலேஅது போதுமே

பெண்:   தண்ணியத்தான் விட்டுபுட்டு தாமரையும் போனதுன்னா
தருமாற தலசாயுமே


ஆண்:   மறைஞ்சி போனாலும் மறந்து போகாத நெனப்புதான் சொந்தமே

பெண்:   பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
உன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே

ஆண்:   நீ பார்க்காம போனாலே கிடையாதே மறுசென்மமே

ஆண்:   கூடமேல கூடவச்சி கூடலூரு...கூடலூரு போறவளே

பெண்:   நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன

ஆண்:   ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு வாரமா

பெண்:   நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா

Sunday, 2 February 2014

நடிகைகளை (அனுயா, நயன், ஹன்சி, காஜல்) கதறவிட்ட இயக்குனர்


இன்றய திரைப்படங்களில் நடிகைகள் குறித்த பாத்திரங்கள் மிக மோசமாக சித்தரிக்க படுகிறது  அதுவும் திரைப்பட இயக்குனர் ராஜேஷ் இயக்கும் படங்களில் மிக மிக மோசம். இரட்டை அர்த்த வசனங்கள் , முகம் சுழிக்க வைக்கும் காட்சி அமைப்புகள் என பெண்களை படு கேவலமாக இயக்குகிறார் .


 முதல் படத்தில் திருமணத்திற்க்கு முன்பே முதலிரவு , அதுவும் நாயகன் பாத்திரம் கெட்டவனாக இருந்த போதும் அவன் குடிக்கும் இடத்திற்க்கே வந்து திருமணத்திற்க்காக கெஞ்சுவது போல படு கேவலமான காட்சி . 

இரண்டாம் படத்தில் நாயகன் பொறுப்பற்றவன் அவனுக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாத கல்லூரி பேராசிரியை விரும்புவது போலவும் அவனை உழைத்து காக்க உறுதிக்கொடுப்பதும் என்று படு மட்டரகமான காட்சி. 

இதற்க்கு எந்த விதத்துளையும் குறையாத ஒரு கல் ஒரு கண்ணாடி வேறு 

சமீபத்திய படத்தில் நாட்டியத்திற்க்கும் தெரு கூத்திற்க்கும் வித்தியாசம் தெரியாத பெண்ணாக காட்டுவது பெண்களை இழிவு படுத்த வேண்டுமென்றே  எடுத்த காட்சி . ஏன் பெண்கள் மீது இந்த கொலைவெறி .........

நெஞ்சில்! நெஞ்சில்! இதோ! இதோ!...




நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ
நெஞ்சில்..

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகழ் இன்பங்கள் பொழிகையில்
நெஞ்சில்..

ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நகர்வது ஏன்

உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை காணவேண்டி
 
வானம் தாண்டி உனக்குள் நுழைந்து
 
நெஞ்சில்..

பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் கானி துடிக்க துடிக்க

நெஞ்சில்..

Saturday, 1 February 2014

தங்கத்தை பற்றிய உண்மை


       இந்தியாவில் தங்கத்தை விரும்பாதவர்கள் ஒருவரும் இல்லை. பல ஆண்டுகளாக அதன் விலை உயர்ந்து கொண்டே வந்ததும், குறிப்பாக கடந்த 5 முதல் 7 ஆண்டுகளின் வளர்ச்சி, எல்லோருக்கும் அது ஒரு நல்ல இன்வெஸ்ட்மென்ட் என்ற நம்பிக்கை வந்ததற்கான காரணமாகும்.


நாம் தங்கத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று ஆபரண தங்கம், அன்றாடம் அணிந்துகொள்வது, அணியாதபோது அதை லாக்கரில் வைப்பது. பெரும்பாலும் இந்த வகையான தங்கம் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கொடுப்பது என்பது தொன்று தொட்டு வரும் ஒரு பண்பு அல்லது வழக்கம் என்றும் கூறலாம். மற்றொன்று தங்கத்தை ஒரு முதலீடாகக் கருதி வாங்குவது. இதை நகைக்கடைகளில் தங்கமாகவும், தங்க சீட்டிலும் வாங்குவது. மற்றொன்று காகித தங்கம்.

தங்கம் வாங்குவதற்குப் பொதுவான காரணம், நமக்கு வேண்டும்பொழுது அதை விற்று காசாக்கி கொள்ள முடியும் என்று ஒரு கூற்று. நடைமுறை வாழ்க்கையில் எந்த பெண்ணும் அதற்கு உடன்படுவதில்லை. பெரும்பாலும் அது ஒருவரிடத்தில் இருந்து மற்றவருக்கு (சந்ததி சந்ததியாக) ரிலே ரேஸ் போல சென்று கொண்டே இருக்கிறது.

தங்கத்தை பற்றிய உண்மை

நான் கூறப்போகும் தங்கத்தை பற்றிய உண்மையை பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், ஆனால் இது மிகவும் உண்மையான ஒரு விஷயம். நாம் தங்கத்தை வாங்குவதற்கு அமெரிக்க டாலரை தான் உபயோகப்படுத்துகிறோம்.

உலக நாடுகளில் தங்கத்தை ட்ராய் அவுன்ஸில் அளவிடுகிறார்கள். ஒரு அவுன்ஸ் 31.1 கிராமுக்கு சமம். ஏறக்குறைய 4 பவுன் என்று நம்முடைய கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். 1980ம் ஆண்டு ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் 850 அமெரிக்க டாலர், அதே தங்கம் 2000ம் ஆண்டு 270 டாலருக்கு வந்து, மீண்டும் 2008ம் வருடம் 850 டாலரை எட்டுகிறது. 28 வருடம் உலக சந்தையில் எந்த ஒரு வளர்ச்சியும் அடையவில்லை. பணவீக்கத்தை கணக்கில் எடுத்துகொண்டால் அது மைனசில் சென்றுவிடும். அதே சமயம் ஒரு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 ரூபாயிலிருந்து 48 ரூபாய் வரை வந்துவிட்டது. இதனால் இந்தியாவில் தங்கம் எப்போதும் உயர்ந்தே காணப்பட்டது.

கடந்த 18 மாதங்களுக்கு முன்பு ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் 1930 டாலராக இருந்தது, இப்போது 1200 டாலர், அதாவது ஏறக்குறைய 38% வீழ்ச்சி அடைந்துள்ளது. அந்த கால கட்டத்தில் 46 ருபாய் இருந்த டாலரின் மதிப்பு இப்போது 62 ரூபாயாக மாறி உள்ளது. ஆதாவது 35% டாலர் அதிகரித்ததால் இங்கு பெரிதாக விலை குறையவில்லை.

உங்களை நீங்களே கேட்டுகொள்ளுங்கள், இங்கிருந்து ரூபாய் இன்னும் 5 வருடத்தில் எங்கு இருக்கும்? மேலும் உலகசந்தையில் ஏறி இருக்குமா இல்லை இறங்கி இருக்குமா? கண்டிப்பாக கரன்சி பெரிதாக ஏற வாய்ப்பில்லை. உலக சந்தையிலும் இறங்குவதற்கான வாய்ப்புகள் நிறைய என செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. மற்றொரு தகவல் ஒரு நாடு முன்னேற்றம் அடையும்போது அந்த நாட்டின் கரன்சி அதிகரிக்குமே தவிர குறையாது.

இந்தியாவில் தான் நிறைய மக்கள் 25 முதல் 35 வயது வரை உள்ளார்கள் என்று ஒரு ஆய்வில் கூறுகிறார்கள். அதனால் நம் ரூபாயின் மதிப்பு கூடுவதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன.

இன்று நிறைய பேர் தங்கத்தை வங்கிகளில் வாங்குகிறார்கள், அது மிக மிக தவறான ஒரு செயல். முதலில் அந்த தங்கம் 24 காரட், மேலும் அதை மீண்டும் வங்கியில் வாங்கிக் கொள்ளமாட்டார்கள். ஆபரண தங்கத்தைவிட அது 15% கூடுதல் விலை. நாம் வாங்கினால் நம் வீட்டின் வரவேற்பறையில் கூட வைக்க முடியாது. அதை நகைக்கடையில் கொடுத்து தான் பணமாகவோ அல்லது ஆபரணமாகவோ வாங்கி கொள்ளமுடியும். தங்கத்தை வைத்து நமக்கு யாரும் மாதா மாதம் பணம் தரப்போவதில்லை. அதை விற்கும்போது செய்கூலி, சேதாரம் போக நாம் வேறு நகையாக வாங்கமுடியும். பணம் வேண்டும் என்றால் தங்கத்தின் மதிப்பில் இன்று 4% எடுத்துக்கொண்டு அதுவும் காசோலையாக தான் பெரிய நகைக்கடைகளில் கொடுக்கிறார்கள்.

இன்றைய யுவதிகளுக்கு தங்கத்தில் அதிகம் நாட்டமில்லை, மேலும் அவர்களுக்கு அதை லாக்கரில் வைத்து எடுப்பதில் துளிக் கூட இஷ்டமில்லை. அதனால் அவர்கள் எளிதாக பயன்படுத்தக்கூடிய டிசைனர் வகை ஆபரணங்களையே அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் இன்னும் நம்முடைய சமூகத்தில் திருமணம் என்றால் நகையைத் தவிர்க்க முடிவதில்லை. சிறந்த வழி என்னவென்றால், நாம் தினசரி அணியும் நகைகளை மட்டும் அணிந்து கொண்டு, குழந்தைகளின் திருமணத்திற்காக காகித தங்கமாக சேமித்தல் சிறந்தது. அதைவிட சிறந்தது, வேறு ஏதாவது ஒன்றில் இன்வெஸ்ட்மென்ட் செய்து அந்த பணத்தை திருமணத்தின் சமயம் தங்கமாக மாற்றிகொள்ளலாம்.

எந்த ஒரு முதலீட்டிலும் நேரடியாக பணத்தை வாங்கிகொண்டாலோ அல்லது அந்த முதலீடு ஒரு ஒழுங்கு முறை கட்டுபாட்டின் கீழ் வரவில்லை என்றால் அந்த மாதிரி முதலீடு மிகவும் ரிஸ்க்கான விஷயம். இன்று நிறைய கருப்பு பணம் இந்த முதலீட்டில் உள்ளது. மற்ற முதலீடுகள் என்றால் ஒருவர் எவ்வளவு வைத்துள்ளார் என்று எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். இந்த முதலீட்டில், அது மிக மிகக் கடினம் என்றே சொல்லலாம்.

முதலீடு என்பது வளரக்கூடியதாக இருக்க வேண்டும். அது அவ்வப்போது நமக்கு வட்டியோ அல்லது டிவிடென்டோ தரவேண்டும். அதை விற்கும்போது மட்டும் பணம் தந்தால் அது சிறந்த முதலீடாக இருக்க முடியாது. உலகின் மிக பெரிய பணக்காரரில் ஒருவரும் மிகச்சிறந்த முதலீட்டாளருமான வாரன் பப்பெட் என்பவர் தங்கத்தை ஒரு முதலீடாகக் கருதுவதில்லை. எந்த ஒரு கமாடிட்டியுமே ஒரு சிறந்த முதலீடு கிடையாது ஏனெனில் அதை ஒரு நம்பிக்கையின் பேரில் நாம் வாங்குகிறோம், நம் நம்பிக்கை பொய்த்துப்போக வாய்ப்புள்ளது. அதே பணத்தை ஒரு பிசினசில் முதலீடு செய்யும்பொழுது, அது பல மடங்கு வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது.

சாராம்சம்:


தங்கம் ஒருவருக்கு தேவை, மேலும் அது சமூகத்தில் அந்தஸ்து கொடுக்கிறது, நம்முடைய உறவினர்கள் நம்மை மதிக்கமாட்டார்கள் என்ற எண்ணம் இருந்தால் நீங்கள் வாங்கலாம். ஏனெனில், அது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம். அதைவிடுத்து அது ஒரு முதலீடு, நாளை நல்ல ரிடர்ன் கொடுக்கும் அல்லது கடந்த பத்து ஆண்டுகளை போல விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நினைப்பில் வாங்குவது மிகவும் தவறு.
Related Posts Plugin for WordPress, Blogger...